செங்கல்பட்டு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அஞ்சூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழக அரசு சார்பில், விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், கலந்து கொண்ட செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் திமுக, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.