டெல்லி: நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தோடு ஆதார் சேவை மையத்தை அணுகலாம் எனவும் செப்.14ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
இலவச ஆதார் புதுப்பிப்பு: செப்.14 வரை அவகாசம்
previous post