திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி உப்பரப்பள்ளியை சேர்ந்த ஒருவர், ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு சில தினங்களுக்கு முன், இலவச சலுகை குறித்த ‘லிங்க்’ வந்துள்ளது. இதனால் அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து சில நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ₹2 லட்சத்து 46 ஆயிரத்து 483 பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்ேரா விஞ்ஞானி இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானியிடமே லிங்க் அனுப்பி ரூ.2.46லட்சம் அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.