டெல்லி : மோசடி அழைப்புகள் தொடர்பான புகாரில் 2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை எழுந்த புகார்கள் தொடர்பாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், அனுமதியற்ற விளம்பரங்கள் தொடர்பாக 6 மாதங்களில் 7.9 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.