Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பிரான்சில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் புகைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பிரான்சிலும் தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது. இதை மீறினால் ரூ.13,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கேத்தரின் வவுட்ரின் கூறுகையில், ‘‘குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகையிலை இருக்கக் கூடாது. சுத்தமான காற்றை சுவாசிக்க குழந்தைகளுக்கு முழு உரிமை உள்ளது. எனவே இந்த தடை கடுமையான பின்பற்றப்படும். மீறினால் நிச்சயம் தண்டனை தரப்படும்’’ என்றார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 75 ஆயிரம் பேர் புகையிலை தொடர்பான உடல் பாதிப்புகளால் உயிரிழந்து வருகின்றனர்.