Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரான்சில் பள்ளி, பூங்கா, கடற்கரை அருகே புகைப்பிடிக்கத் தடை

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. பிரான்சில் ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோயால் இறப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு சுமார் 75000 பேர் இறப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே புகைப்பிடிப்பதற்கு தடை விதிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே உணவகங்கள், பார்கள் மற்றும் பொதுக் கட்டிடங்ளில் புகைப்பிடிப்பது சட்டவிரோதமானது என்று அரசு தடை விதித்து உள்ளது. இந்நிலையில் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரை அருகே புகைப்பிடிப்பதற்கு தற்போது தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடையானது நாளை மறுநாள் (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றது. இது குறித்த அரசு அறிவிப்பு நேற்று வெளியானது.