பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 299 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 74 வயதான டாக்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக். 74 வயதான இவர் 299 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கை மோர்பிஹானின் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் முடிவில் 1989 முதல் 2014 வரை சராசரி 11 வயதுக்குட்பட்ட 158 சிறுவர்கள், 141 சிறுமிகளை அவர் மயக்க ரீதியில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 2017ல் அவர் கைது செய்யப்படும் வரை இந்த துஷ்பிரயோகத்தை செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.