வேளச்சேரி: தரமணியில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவிருக்கும் பேருந்து நிலையத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மேயர் பிரியா, அசன் மவுலானா எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி, 178வது வார்டுக்கு உட்பட்ட தரமணியில் தென்சென்னை நாடாளுமன்ற திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ60 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு இன்று காலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தலைமை தாங்கி, புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அசன் மவுலானா எம்எல்ஏ, அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ்,178வது வார்டு உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.