சென்னை : ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் சிக்கல் ஏற்படாது என்று விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும் என்று அதுல்ய மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உலகளவில் ஃபார்முலா கார் பந்தயம் நடக்கும் 14 இடங்களில் தற்போது சென்னையும் இணைந்துள்ளது என்றார்.