சென்னை: சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற ‘Formula 4 Car Racing on the Street Circuit’ போட்டிகள் நிறைவுற்ற நிலையில், இப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த Galleries, Stand, தடுப்புகள் போன்ற தற்காலிக அமைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணமும், சேதங்கள் ஏற்படாத வகையிலும், இப்பணியை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.