சென்னை: “ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் “சென்னை, உலகளவில் Reach ஆகியிருக்கு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவெற்றியூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2007 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழ்நாடு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. “ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் “சென்னை, உலகளவில் Reach ஆகியிருக்கு. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். கார் பந்தயத்திற்காக போடப்பட்ட கட்டமைப்புகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வரும் கார் பந்தயம் நடத்துவது குறித்து ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும். பின்னர் இது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார்.