சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு 4 மணி நேரம் கால நீட்டிப்பு வழங்க உத்தரவிடக் கோரி அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் காலநீட்டிப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்யப்பட்டுள்ளது.