சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,250 கார்கள் மற்றும் 4600 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலை. வளாகம், பத்திரிகையாளர் மன்ற சாலை,கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் பந்தயத்துக்கு 3 துணை ஆணையர், 8 இணை ஆணையர், 37 ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.