சென்னை: முரசொலி மாறன் படைத்தளித்த ஆக்கங்கள் திமுகவின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன, முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றிய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வோம் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “தலைவர் கலைஞரின் மனசாட்சி” ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்த முரசொலி மாறன் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் இன்று!
“ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?”, ” திராவிட இயக்க வரலாறு”, “மாநில சுயாட்சி” என அவர் படைத்தளித்த ஆக்கங்கள் கழகத்தின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன.
இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம்!” என தெரிவித்துள்ளார்.