டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கி கணக்குகளை கடந்த 2007ம் ஆண்டு தேசிய வருவாய் வாரியம் முடக்கியது. மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மட்டும் வங்கியில் இருந்து எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று கலிதா ஜியாவின் வழக்கறிஞரிடம் இருந்து வங்கி கணக்குகள் மீதான முடக்கத்தை நீக்க விண்ணப்பித்ததாக தேசிய வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது.