கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சிபிஐயால் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஜூனியர் மருத்துவர் ஆகஸ்ட் 9ஆம் தேதி கற்பழிக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.