சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில மக்களுக்காக தன்னலமற்ற சேவையாற்றி வரும் சந்திரபாபு நாயுடு இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு முறியடித்து மீண்டு எழுவார் என்பதை காலம் உணர்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.