மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரை சேர்ந்தவர் ஒன்றிய முன்னாள் அமைச்சர் பாபன்ராவ் தக்னே(86). மாரடைப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஜனதா தள கட்சியின் மாநில தலைவரான பதவி வகித்துள்ள பாபன்ராவ் தக்னே சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது ஒன்றிய இணை அமைச்சராக பதவி வகித்தார். மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சாகவும் இருந்துள்ளார்.