டாக்கா: வங்கதேசத்தில் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ஆங்காங்கே பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஹசீனாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன் வியாபாரி சுட்டுக்கொல்லப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷனாஸ் பேகம் என்பவர் தனது கணவர் மிலான் ஜூலை 21ம் தேதி உள்ளூர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா போராட்டத்தில் ஈடுடப்ட மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஷேக் ஹசீனா மற்றும் அமைச்சர்கள் உத்தரவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.