டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஜூனியர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாரின்பேரில் பிரிஜ் பூஷண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். டெல்லி போலீசாரின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அமர்வு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. பிரிஜ் பூஷண் மீது தனது மகள் பொய்யான புகாரை அளித்ததாக போலீசாரின் விசாரணையின்போது வாக்குமூலம் அளிக்கப்பட்டது. பிரிஜ் பூஷண் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2023 ஜூன் 15ல் போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். டெல்லி போலீசாரின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அமர்வு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. பிரிஜ் பூஷண் மீது சாக்சி மாலிக் உள்பட 6 வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
0