ஷில்லாங்: மூத்த காங்கிரஸ் தலைவரும் மேகாலயா முன்னாள் முதல்வருமான சால் செங் மராக்(82) நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மராக் நேற்று துராவில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். இவர் கடந்த 1993ம் ஆண்டு மேகாலயாவின் முதல்வரானார். அப்போது தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தார். அதன் பின்னர் 1998ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் 2வது முறையாக முதல்வரானார். அப்போது 12 நாட்களில் அரசு கவிழ்ந்தது. இதனால் பதவி இழந்தார். பின்னர் 2003ம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார்.