மேட்டுப்பாளையம்: மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (35). இவரது மனைவி திவ்ய பிரியா (28), அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி ஆவார். தம்பதி இருவரும், உறவினர்கள் நால்வருடன் காரில் ஊட்டிக்கு சென்றனர். ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு நேற்று முன்தினம் மாலை காரில் மேட்டுப்பாளையம் வழியாக மதுரைக்கு புறப்பட்டனர். காரை பார்த்திபன் (32) என்பவர் ஓட்டினார். கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோர மண் திட்டில் மோதி கார் குப்புற கவிழ்ந்தது.
இதில், திவ்ய பிரியா மற்றும் அவரின் உறவினர் பரமேஸ்வரிக்கு (44) தலையில் பலத்த காயமும், மற்றொரு உறவினர் வளர்மதிக்கு இடது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே திவ்ய பிரியா பரிதாபமாக இறந்தார். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மண்திட்டில் கார் மோதி அதிமுக முன்னாள் அமைச்சர் பேத்தி பலி
0