புதுடெல்லி: ஆவின் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலத்துக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ராஜேந்திர பாலாஜி இந்தியாவுக்குள் வெளி மாநிலங்களுக்கு செல்லலாம்.ஆனால் வழக்கு விசாரணைக்கு அழைக்கும் போது அதனை காரணம் காட்டக் கூடாது. ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. அவசியம் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அங்கு அனுமதி கிடைத்தால் செல்லலாம் என தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலம் செல்ல அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
114