நாமக்கல்: ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமியை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில் நிலத்தை வாங்கி என்.பி.எஸ்.நகர் என்ற பெயரில் நகர்களை அமைத்து விற்பனை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் கடந்த அதிமுக ஆட்சியில் நிலத்தை வாங்கிய நிலையில் பணத்தை தராமல் இழுத்தததாக புகார் எழுந்தது.
வாங்கிய நிலத்துக்கு பணம் தராததை அடுத்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பொன்னுசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்திருந்த நிலையில் பொன்னுசாமி தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பொன்னுசாமியை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைதுசெய்தனர். திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமி குற்றப்பிரிவு போலீசிடம் பிடிபட்டார்.