மணிலா,ஃபிலிப்பைன்ஸ்: ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.டுடெர்ட்டேவின் ஆட்சி காலத்தில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற போதைப்பொருள் எதிர்ப்பு இருந்தது. போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்றும் அழைக்கப்பட்டது. அவரது ஆறு ஆண்டுகால ஜனாதிபதி காலத்தில், 7,000 க்கும் மேற்பட்டோர் அதிகாரப்பூர்வ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
(2016-22) போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது. முன்னாள் ஜனாதிபதிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் ஜெனரல் அறிவிப்பை வழங்கினார். சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே ஹாங்காங்கிலிருந்து வந்தவுடன் மணிலா விமான நிலையத்தில் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.