புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜாகினா கிராமத்தில் 1931ம் ஆண்டு பிறந்தவர் நட்வர் சிங். வெளியுறவுத்துறை அதிகாரியாக 31 ஆண்டுகள் பணியாற்றி நட்வர்சிங், அதை தொடர்ந்து காங்கிரஸ் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 93 வயதான அவர் கடந்த சனிக்கிழமை காலமானார். அவரது உடல் நேற்று டெல்லி லோதி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கஜேந்திர ஷெகாவத், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, அரியானா மாஜி முதல்வர் பூபீந்தர்சிங் ஹூடா உள்ளிட்டோர் இறுதிசடங்கில் பங்கேற்றனர்.