இம்பால்: மணிப்பூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஹாகிப். தற்போது பாஜவில் உள்ளார். இவர் தன் மனைவி சபம் சாருபாலாவுடன் காங்போக்பி மாவட்டம் எகோமுலாம் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த குப்பைகளை சாருபாலா எரித்து கொண்டிருந்தார். அப்போது குப்பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த சபம் சாருபாலாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சபம் சாருபாலா உயிரிழந்தார்.