புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் ஜோஷி (77), உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியில், 1979-83ம் ஆண்டுகளில் இடம் பெற்றவர் திலீப் ஜோஷி. 33 டெஸ்ட் போட்டிகளிலும், 13 ஒரு நாள் போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 முறை, 5 விக்கெட்டுகளை திலீப் ஜோஷி எடுத்துள்ளார். இருதய கோளாறு காணமாக சிகிச்சை பெற்று வந்த திலீப் ஜோஷி, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி காலமானார்
0