திருப்போரூர்: திருப்போரூர் அருகே டிரம்மில் பிளாஸ்டிக் கவரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கொலை வழக்கில், அவர் ரத்த வாந்தி எடுத்ததால் இறந்ததாக கள்ளக்காதலி வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து துர்நநாற்றம் வீசியதையடுத்து, திருப்போரூர் போலீசார் அங்கு சென்று திண்டிவனம் அடுத்த அன்னம்பாக்கம் கிராத்தை சேர்ந்த வளத்தி கோவிலன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மங்களபிரியா தலைமையிலான போலீசார், சைதாப்பேட்டைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார், எழிலரசியை கண்டுபிடித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், தாங்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் வளத்தி கோவிலானின் மனைவி இறந்தபிறகு அவர் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், ஆலத்தூர் பகுதியில் 6 ஆண்டுகளாக வசித்து வந்தோம்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமாக சம்பவத்தன்று அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டதாகவும், இதனால் பயந்துபோன தான் பிளாஸ்டிக் டிரம்மை சாய்த்து அவரது உடலை உள்ளே தள்ளி பிளாஸ்டிக் கவர் போட்டு மூடிவிட்டு சென்று விட்டதாகவும், தான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இதுகுறித்து, இறந்த வளத்தி கோவிலனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகும்தான் இறந்து கிடந்த நபர் இயற்கையான முறையில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.