சென்னை: தருமபுரியில் யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவத்தில் வனத்துறையின் அறிக்கையில் முரண்பாடு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வனத்துறையின் விசாரணை அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. விசாரணை விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பென்னாகரம் அடுத்த நெருப்பூரில் மார்ச் 1ம் தேதி யானை கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வனத்துறை அறிக்கையில் முரண்பாடு உள்ளது – ஐகோர்ட்
0