வாஷிங்டன்: அமெரிக்காவில் மிக பழமையான பல்கலைகழகமாக ஹார்வர்ட் பல்கலைகழகம் உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தீவிரமாக நடந்து வந்தன. இதனால் அதிபர் டிரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 15 % உச்சவரம்பு இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், டிரம்ப் பிறப்பித்த உத்தரவில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், வெளிநாட்டு மாணவர்களை தொடர்ந்து அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டினரின் நுழைவு அமெரிக்காவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என நான் முடிவெடுத்துள்ளேன். என்னுடைய கருத்தின்படி ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பொருத்தமற்ற இடமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹார்வர்ட் அதன் சர்வதேச மாணவர்களை தொடர்ந்து பாதுகாக்கும். இது சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.
தற்போது பல்கலைகழகத்தில் 7000 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீன அதிபருடன்டிரம்ப் பேச்சு: அமெரிக்கா மற்றும் சீனா இடையே வரி விதிப்பு மோதல் நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலை சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.