மணிகரன்: இமாச்சல் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் நகரம் வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்றவையாகும். இந்நிலையில், மணிகரனின் அருகே பார்வதி நதிக்கரையின் ஓரத்தில் தாகிரி பகுதியில் உள்ள வெந்நீர் ஊற்றின் அருகே கழுத்து மற்றும் கையில் வெட்டு காயத்துடன் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலம், கையில் காயத்துடன் 20 வயது பெண்ணின் சடலமும் நிர்வாண நிலையில் கிடந்தன. இவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.