செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே பகுதியில் உள்ள கோரி இஞ்சினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ‘யமஹா’ எம்.டி., இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார்.
அவர் பணியாற்றும் தொழிற்சாலை வளாகத்தில் ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால் வளாகத்தின் வெளியே தொழிற்சாலை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு பின்னர் வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும், மதியம் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இது குறித்து விக்னேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது விக்னேஷின் பைக்கை மர்மநபர் திருடிச் மற்றும் தள்ளிக்கொண்டே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் திருப்போரூர் அடுத்த மடையத்தூர் மற்றும் கோவளம் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த ‘சிசிடிவி’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.