நடிகர் சூர்யா - ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு நடத்திய சிறப்பு கொண்டாட்டத்தின் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர் சூர்யா - ஜோதிகா, இந்த ஆண்டு தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தொடர்ச்சி’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். வீடியோவில் சூர்யாவும் ஜோதிகாவும் வெள்ளை நிற உடையில் அழகாகத் தோன்றுகின்றனர். ஜோதிகாவை மகன் தேவ் கைப்பிடித்து அழைத்து வர, மகள் தியா சூர்யாவை அழைத்து வருகிறார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, ஜோதிகா பகிர்ந்த புகைப்படங்களில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான தருணங்களும், குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
20 ஆண்டுகால திருமண வாழ்க்கையைப் பற்றி பதிவிட்ட ஜோதிகா, இது முழுமையான திருமண வாழ்க்கையைக் கொண்டாடுவது அல்ல என்றும், அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், தியாகம் மற்றும் சுயநலமின்றி ஒருவரை ஒருவர் நேசிப்பதைக் கொண்டாடும் தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமணம் கிரீஸ் நாட்டில் தேவாலயத்தில் மேற்கத்திய முறையில் திருமணம் செய்து கொண்டது பலரையும் உணர்வுப் பூர்வமாக வாழ்த்துத் தெரிவிக்க வைத்திருக்கிறது.


