மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார். என்னை யாருக்கும் தெரியாது எனக் கூறியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக அமைச்சராக நான் இருந்துள்ளேன். உலகத்தில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
பிரதமர் மோடியே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமியை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக கூறினார். உதயகுமாரும் 3 துறைகளுக்கு அமைச்சராக இருந்து செயல்பட்டுள்ளார். மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று நான் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளேன். அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா? இவ்வாறு தெரிவித்தார்.