சான்டியாகோ: பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் சிலியை அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. வரும் 2026ல், பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. அத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா – சிலி நாடுகள் மோதின. போட்டி துவங்கி 16வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஜூலியன் அல்வாரஸ் அபாரமாக பந்தை கடத்திச் சென்று கோல் அடித்தார். அதன் பின் யாரும் கோல் போடாததால், 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. தென் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கான புள்ளிப் பட்டியலில் அர்ஜென்டினா அணி, 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கால்பந்து தகுதி சுற்று சிலிர்க்க வைத்த போட்டியில் சிலியை வென்ற அர்ஜென்டினா
0