நன்றி குங்குமம் டாக்டர்
உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு பெரும்பங்கு வகிக்கிறது. எளியமுறையில் வீட்டில் இருக்கும் உணவுகளே நமக்கு மருந்துகளாக பயன்தருகின்றன. பத்தியமில்லாத அன்றாடம் கடைபிடிக்கக்கூடிய உணவு பழக்கங்களை இவற்றை பின்பற்றினாலே நோய் வராது.
ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமான மாத்திரைகளை போடுவதைவிட, ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி, புதினா சேர்த்து டீ போட்டு அருந்த, பால் சேர்க்காமல் குடிக்க, ஜீரணம் எளிதில் ஆவதுடன் பின் நல்ல பசி எடுக்கும். உப்பு, புளி, பெருங்காயம், மிளகு எல்லாவற்றையும் தனித்தனியே சூடான வாணலியில் வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட, வாயு கோளாறு நீங்கிவிடும். பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரும்புச்சாற்றில் ஊறவிட்டு அதனுடன் சீரகம், உப்பு கலந்து சட்னியாக அரைத்து சாப்பிட்டு வர, இளநரை மறையும்.
பயத்தம்பருப்பை வேகவிட்டு அதனுடன் சிறிது கசகசாவை பொடித்துப் போட்டுக் கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு பாயசம் போல் சாப்பிட்டு வர, அல்சர் முழுமையாக குணமாகும். பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக்கொட்டை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு போட்டு துவையலாக செய்து சாப்பிட்டு வர வாதம் வராது. வந்தாலும் குணமடைந்து விடும்.
ரோஜா இதழ்களை நிழலில் காய வைத்து அதனுடன் ஏலக்காய், சுக்கு சேர்த்து நன்கு பொடிக்கவும். தினமும் இதை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருகி வர, உடல் சூடு மட்டுமின்றி எடையும் குறையும்.அத்திப்பழம், பேரீச்சம்பழம் சம அளவு எடுத்து அரைக்கவும். பனை வெல்லத்தில் பாகு வைத்து அரைத்த விழுது சேர்த்து ஜாம் போல செய்து அடிக்கடி சாப்பிட ரத்த சோகை வரவே வராது.
பெரிய நெல்லிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து நீர்விட்டு வடிகட்டவும். இதனை தேன் கலந்து ஜுஸாகக் குடிக்க மூக்கடைப்பு விலகும்.செர்ரிப் பழங்களை பொடியாக நறுக்கி மாதுளை சாற்றில் ஊறவிடவும். மாலையில் இத்துடன் 1 சிட்டிகை கசகசா பொடியைக் கலந்து சாப்பிட, தூக்கம் வரும். உடல் புத்துணர்ச்சி பெறும்.பித்தம் அதிகரித்தால் மாதுளம் பூ ஜூஸில் தேன் கலந்து பருகலாம். அரைநெல்லிக்காயுடன் உப்பு, 2 மிளகு, கால் தேக்கரண்டி சீரகம் வைத்து அரைத்து கடைந்த மோருடன் குடிக்க, காமாலை குணமாகும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்