*சளித் தொல்லை உள்ளவர்கள் கொய்யாப்பழத் துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* மாதுளம்பழத்தின் தோலை அரைத்து எருமை தயிரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* தக்காளிப்பழ சாறு எடுத்து சூப் வைத்து அருந்தி வந்தால் சொறி சிரங்கு நலமாகும்.
* ஆரஞ்சுச் சாறுடன் மிளகுப்பொடி கொஞ்சம் உப்பு கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
* வாழைப்பழத்தை இளநீரில் குழைத்து பத்திய சமயங்களில் சாப்பிட்டால் உடல் நலம், பலம் பெறும்.
* கொஞ்சம் சுண்ணாம்போடு தேன் கலந்து குழைத்து கட்டிகளுக்கு போட்டால் கட்டிகள் உடையும்.
* பப்பாளிப்பழக் காய்களை சாம்பாரில் போட்டு சமைத்தால் உடல் பலம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.
v அன்னாசி சாறு அருந்துவதால் மஞ்சள் காமாலை மெல்ல சரியாகும்.
* திராட்சைப் பழங்கள் தாகத்தை தீர்க்கும்.
* பீட்ரூட் சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி மிளகும், உப்பும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் பளபளக்கும்.
*கேரட் அல்வா சாப்பிட்டால் உடல் வனப்பு மிகமாக அதிகமாகும்.
* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
* தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
* மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
– விமலா சடையப்பன்
உணவே மருந்து
0