♦ மெலிதான உடல் தோற்றம் கொண்டவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குண்டாகும்.
♦ வாழைப்பூவின் சாறை தயிருடன் கலந்து சாப்பிட ரத்த பேதி குணமாகும். கை, கால் எரிச்சல், இருமல், மூலம், மேக நோய்கள் குணமாகும்.
♦ தொடர்ந்து 90 நாட்கள் இளநீர் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
♦ தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி மறையும். குரல் வளமாகும். ஆயுளும் கூடும்.
♦ சருமத்தில் அரிப்பு, சிலந்தியால் அவதிப்படுகிறீர்களா? அரிசி வடித்த கஞ்சியை எடுத்து பாதிப்புள்ள பகுதியில் அல்லது உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னைகள் நாளடைவில்சரியாகும்.
♦ மலை வாழைப்பழத்தை சாப்பிட்டால் சூட்டை தணிக்கும். பித்தத்தை போக்கும். மலச்சிக்கலை அகற்றும்.
♦ தக்காளிப்பழச் சாறுடன் சாத்துக்குடி சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் சீத பேதி சரியாகும்.
♦ குப்பைமேனி இலையுடன், கஸ்தூரி மஞ்சளை சேர்த்து மைய அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால், தேவையற்ற முடிகள் உதிரும்.
– அ.ப. ஜெயபால்
உணவே மருந்து!
previous post