*விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
*சளி தொல்லை உள்ளவர்கள் கொய்யா பழம் துண்டுகளில் மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
*தக்காளி பழச்சாறு எடுத்து சூப்வைத்து குடித்தால் சொறி, சிரங்கு சரியாகும்.
*மாதுளம் பழத்தோலை அரைத்து எருமை தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகும்.
vஉடையாத கட்டிகளுக்கு வாழைப் பழத்தை வைத்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
*தேனும், பாலும் கலந்து அதில் ஆப்பிள் நனைத்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
*மாம்பழச் சாறு, கேரட் சாறு இரண்டையும் கலந்து குடித்தால் சிறுநீர் வழி சரிப்படும்.
*கேழ்வரகு மாவை சிறிது பச்சரிசி மாவுடன் கலந்து கூழ் காய்ச்சி சாப்பிட்டால் சிறுநீர் நன்கு ப்இரியும்.
*அருகம்புல்லை படுக்கையில் பரப்பி அதன் மேல் படுத்தால் வாதம் குணமாகும்.
*மீன் எண்ணெய்யோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆறாத புண்களும் ஆறும்.
*பிரசவ வேதனை ஏற்படும் முன்னர் இரண்டு அவுன்ஸ் தேன் குடித்தால் சுகமான பிரசவம் ஆகும்.
*வெற்றிலையோடு மூன்று நல்ல மிளகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பூரான் கடி சரியாகும்.
*தூதுவளை இலைகளை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் கபக்கட்டு குணமாகும்.
*தாய்மார்களின் முலைகாம்பு ரணத்திற்கு பால் கட்டிக்கும் தேன் தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.
*கத்தரிக்காய் சமைக்கும் போது அதன் காம்பை மட்டும் தான் நீக்க வேண்டும். காயின் மேல் உள்ள கிரீடத்தை கழட்ட தேவையில்லை.
– விமலா சடையப்பன்
உணவே மருந்து
0