சென்னை : கள்ளின் ஆபத்துத் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “‘கள் உணவு’ என்று ஒரு சிலர் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள். கள் மதுவே தவிர, அது உணவாகாது. கள் உடம்புக்கு நல்லது என்று தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. கள்ளின் ஆபத்துத் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்? கள் இறக்கும் போராட்டம் நடத்துவதும் அதை பொது வழியில் குடித்துக் காட்டுவதும் சட்டவிரோதமே. அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
‘கள்’ உணவு அல்ல கொடிய விஷம் – புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
0