சென்னை: தமிழகத்தில் உணவுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்களில் புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றிய நிலையில் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து புகைபிடிக்கும் அரை மற்றும் கூடத்தை எங்கும் திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.