ஆந்திராவில் ஆஷாட மாதம் முடிந்து முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவுகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பில் மிரண்டு போன மாப்பிள்ளையின் வீடியோ வைரலாகி வருகிறது.ஆந்திராவில் நம்ம ஊர் ஆடி மாதம் போல, அங்கே தெலுங்கில் ஆஷாட மாதம் முடிந்து புதுமாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு செல்வது மரபு அதன்படி, ஆந்திராவில், திருமணமான ஒரு புதுமாப்பிள்ளை, ஆஷாட மாதம் முடிந்த பின்னர், முதல்முறையாக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே மாமியார் மருமகனுக்காக 100 வகை உணவுகளை சமைத்து ஒரு பெரும் விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதற்கு மீம்கள் போட்டு வைரலாக்கி வருகிறார்கள். பலரும் இதில் 20 வகையைக் கூட அந்த மருமகன் சாப்பிட்டிருக்க மாட்டார். எதற்கு இப்படி உணவை வீணாக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் பெண்ணிய ஆர்வலர்கள் இதே போன்ற கவனிப்பு மகளுக்கு அவரது மாமியார் வீட்டில் கிடைக்குமா. சரிசமமாக நடத்துங்கள், யாரும் இங்கே உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்னும் கருத்துகளும் எழுந்துள்ளன.
100 வகை விருந்து!
previous post