பிரியாணியை வாரம் ஒருமுறை சாப்பிடலாம் என்று சொல்லும் ஃபுட்டிகள் கூட சவர்மாவை தினம் தினம் வெளுத்துக் கட்டுவார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு சவர்மாவிற்கு கிராக்கி அதிகம் ஆகிவிட்டது. பொழுது சாய்ந்து மாலை நேரம் வந்துவிட்டால் பலரும் வாக்கிங் செல்கிறார்களோ இல்லையோ சவர்மா கடைகளைத் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்றைக்கு பிசியான சிட்டி வாழ்க்கையில் சவர்மா ஒரு முக்கியப் பங்கு வகிக்க தொடங்கி இருக்கிறது. எவ்வளவு சவர்மா கொடுத்தாலும் சாப்பிடுகிறார்கள்.
இதனைக் கருத்தில்கொண்டு சென்னை பாடியில் உள்ள டெசர்ட் சவர்மா என்ற உணவகம், பக்கெட்டில் பிரியாணி கொடுத்துதான் பார்த்து இருப்பீர்கள், நாங்கள் பக்கெட்டில் சவர்மாவையே கொடுக்கிறோம் எனக் கூறி பக்கெட் சவர்மா கொடுக்கிறார்கள். ஒரு ஃபேமிலியாக சவர்மா சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டெசர்ட் சவர்மா ஒரு நல்ல ஸ்பாட்.கொத்தமல்லித் தொக்கு, கறிவேப்பிலைத் தொக்கு, பிரண்டைத் தொக்கு என்று பலரும் இன்றைய உணவில் உடலுக்கு நன்மை தரக்கூடிய தொக்கு வகைகளை சேர்த்துக்கொள்கிறார்கள்.
குறிப்பாக பேச்சிலர்ஸ் காலையில் வீட்டில் சோறு தயார் செய்து டிபன் பாக்ஸில் போட்டு வைத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார்கள். அத்தகைய பேச்சலர்ஸ்களுக்கு தொக்கு ஒரு வரப்பிரசாதம். சென்னை திருவான்மியூர் கடற்கரையில் சாய் கொழுக்கட்டை எனும் உணவகத்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, சோறு என்று அனைத்திலும் சேர்த்து சாப்பிடும் வகையில் இந்தத் தொக்கு வகைகள் தரமானதாக கிடைக்கின்றன. தொக்காக தொக்கை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாய் கொழுக்கட்டையை நாடலாம். சென்னையில் பல இடங்களில் நாம் பருப்புப் பாயாசம், பால் பாயாசம், சேமியா பாயாசம் என்று வகை வகையான பாயாசத்தைச் சாப்பிட்டு இருப்போம்.
வெகுசில இடங்களிலேயே இளநீர் பாயாசம் கிடைக்கும். அப்படி ஒரு சுவையான இளநீர் குடிக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கான குட் சாய்ஸ் வேளச்சேரியில் இருக்கிறது. வேளச்சேரி விஜய நகரில் இயங்கி வரும் ஈரோடு முதலியார் விருந்து என்ற உணவகம்தான் அந்த குட் சாய்ஸ். பொள்ளாச்சியில் விளைந்த இளநீருக்கு எப்போதும் தனி மவுசு இருக்கிறது. அத்தகைய பொள்ளாச்சி இளநீரில் இருந்துதான் இந்த உணவகத்தில் பாயாசம் தயாரிக்கிறார்கள். இந்தத் தனித்துவம் மிக்க இளநீர் பாயாசத்தை ருசித்துப் பார்க்க ஒரு ஃபுட்டி பட்டாளமே இருக்கிறது.