முகூர்த்த நாட்கள், வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூ.250க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.