கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, கிருஷ்ணகிரியில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3.208 கன அடியாக உயர்ந்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4.000 கன அடி நீர் வெளியேற்றபட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
0