சென்னை: ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் காரணமாக சென்னை, கோவை வரும் ரயில்கள் உள்பட மேலும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் பெரும் பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களில் பெருமளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவையானது தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுவருகிறது. நேற்று சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யபட்ட நிலையில் இன்றும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 14 ரயில்கள் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து ஆந்திரா, தெலங்கானா வழியாக மற்ற மாநிலங்களுக்கு செல்ல கூடிய ரயில்கள் ஆகும். ரத்து செய்யப்படும் ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்னதாக சுமார் 140 ரயில்கள் வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்று 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்று தற்போது வரை 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம்:
* இன்று மாலை 06.40 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த கூடூர் – செகந்திராபாத் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* இன்று இரவு 11.05 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த செகந்திராபாத் – கூடூர் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது
* இன்று பிற்பகல் 03.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த காக்கிநாடா துறைமுகம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (ரேணிகுண்டா வழியாக) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* இன்று மாலை 6.40 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் -புது தில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* இன்று மாலை 7 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – ஹவுரா அஞ்சல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* நாளை(செப்.4) இரவு 11.25 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த எர்ணாகுளம் – ஹதியா வாராந்திர தர்தி ஆபா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* நாளை காலை 07.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த தாம்பரம் -சந்த்ர்காச்சி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது
* நாளை பிற்பகல் 02.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த புதுச்சேரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* செப்.5 காலை 07.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த எர்ணாகுளம் – டாடா எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* செப்.6 மாலை 04.20 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த கொச்சுவேலி – ஷாலிமார் ஏசி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* செப்.7 காலை 5.50 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* செப்.7 காலை 03.00 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – புருலியா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* நாளை இரவு 09.05 மணிக்கு புறப்பட வேண்டிய புது தில்லி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* இன்று மாலை 07.35 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த ஜெய்ப்பூர் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது, இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.