டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டாக்கா உள்பட பல இடங்களில் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பலத்த மழையினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை வெள்ளத்தால் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி இழந்த பிறகு புதிதாக பதவியேற்றுள்ள இடைக்கால அரசுக்கு இது சவாலாக அமைந்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வங்கதேசம்: 15 பேர் பலி
previous post