நீலகிரி: உதகை அருகே பெம்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைத்துள்ளது. எமரால்டு பகுதியில் கனமழை பெய்தநிலையில் சாலையில் 100 அடி வரை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், உதகையில் தொடரும் கனமழையால் கோத்தகிரி சாலையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோடப்பு மருந்து பகுதியில் 20 அடி உயரம் கொண்ட வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அருகில் இருந்த உறவினர் வீட்டுக்குச் சென்றதால் உயிர் பிழைத்தனர்.