கடையம்: தென் மேற்கு பருவமழையால் ராமநதி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளதால் கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியுள்ளது.
இதனால் அணையானது நிரம்பி வரும் நிலையில் உள்ளது. அணைக்கு 300 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. இதனிடையே நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளதால் கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை
விடப்பட்டுள்ளது.